Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழா… “உணவுக் கடைகளில் திடீர் சோதனை”… 150 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்….!!!!!

வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் சோதனை செய்து தரமற்ற 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து பின் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டியில் புகழ்வாய்ந்த கவுமாரியம்மன் கோவில் உள்ள நிலையில் சித்திரைத் திருவிழாவானது இன்று தொடங்கி வருகின்ற 17 ம் தேதி வரை நடைபெறுகின்றது.

இந்நிலையில் தேனி உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்குமார் மற்றும் குழுவினர் வீரபாண்டியில் உள்ள பெட்டிகடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட பல கடைகளில் திடீர் சோதனை செய்தபோது 3 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தரமற்ற, காலாவதியான காரா சேவு, மிக்சர், அல்வா, டெல்லி அப்பளம், சாயம் அதிகம் பயன்படுத்தப்பட்ட பஜ்ஜி, வடைகள் என 150 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்தார்கள். பிளாஸ்டிக் அதிகம்  பயன்படுத்திய கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தரமற்ற உணவுப் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Categories

Tech |