பொதுவாக நம் அனைவருக்கும் தேநீர் என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் தினந்தோறும் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை கீழே போடுகிறோம். அப்படி பயன்படுத்திய பேக்குகளை கீழே போடாமல் உங்க வீட்டில் உள்ள சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு தேநீர் பேக் என்றால் கூட எவ்வளவு நாள் எவ்வளவு தேநீர் பைகளை நம்மால் சேமிக்க முடியும் என யோசியுங்கள்.
தேநீர் பேக்குகளை கீழே போடாமல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம்.
உங்கள் வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்க தேநீர் பேக் பயன்படும்.
தேநீர் பேக் ஒரு கிருமிநாசினி விளைவை கொண்டுள்ளது. எனவே இனி நீங்கள் சமையல் பாத்திரங்களை கழுவும் போதும் இதைப் பயன்படுத்தலாம்.
வீட்டில் அரிசி சாதம் சமைக்கும் போது கூடுதல் சுவையை பெற டீ பேக்கை பயன்படுத்தி அரிசியை வேக வைக்கும் போது, அதில் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இது உங்களுக்கு நல்ல சுவையை தரும்.
தாவரங்கள் வளர்ப்புக்கு பெரிதளவு பயன்படுகின்றது.
மழைக்காலத்தில் ஏற்படும் கெட்ட துர்நாற்றத்தை போக்க இந்த டீ பேக்குகளை பயன்படுத்தலாம்
நாம் குளிக்கும்போது டீ பேக்குகளை குளியல் நீரில் போட்டு பயன்படுத்தலாம்.
இது மட்டும் இல்லாமல் தேநீர் பைகளை பூச்சி கடிக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். தேனீ குளவி போன்ற பூச்சி கடித்தால் அதன் கொடுக்குகள் சிக்கிக் கொண்டிருந்தால் அதை எடுப்பதற்கு மிகவும் பயன்படும்.
உங்கள் கூந்தலில் எண்ணெய் பிசுக்கு இருந்தால் அதை நீக்குவதற்கு உதவுகிறது.
வீட்டில் பயன்படுத்தும் மிதியடிகளில் கெட்ட துர்நாற்றம் ஏற்படும். இதற்கு தேநீர் பேக்குகளில் உள்ளே உள்ள தேயிலையை கால் மிதியடிகளில் தூவி பயன்படுத்தினால் நல்ல நறுமணம் இருக்கும்.