காஞ்சிபுரத்தில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியூரிலிருக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார். இவர் வெளியூருக்கு சென்றதை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 53,000 ரூபாயையும், 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதனையடுத்து தனது இல்லத்திற்கு திரும்பி வந்த ராமானுஜம், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பணமும், நகையும் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் இச்சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.