Categories
அரசியல்

வீட்டை விட்டு வெளியே வந்தால்…. கால் செய்து….. கம்ப்லைன்ட் பண்ணுங்க….!!

தனிமைப்படுத்தபட்டவர்கள் அரசின் அறிவுரையை மீறி வெளியே சுற்றுவதை அக்கம்பக்கத்தினர் கண்டால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடைபிடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை போக்குவரத்து என்பது மாவட்ட மாநிலங்களுக்கு இடையே தடை பட்டு உள்ளது. அதனை மீறி தங்களது சொந்த மாநிலத்திற்கு, மாவட்டத்திற்கு மக்கள் வர விரும்பினால், இ பாஸ் அப்ளை செய்து அதன் மூலம் ஊருக்கு வந்தபின் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவு வெளியாகி பாதிப்பு இல்லை என்ற பட்சத்திலும், 14 நாள் தனிமைக்கு பிறகு அவர்கள் அவர்களது குடும்பத்தினருடன் சேர முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் வெளியூரிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், அவர்கள் இருக்கும் வீட்டில் மாநகராட்சி அல்லது நகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளாக அடையாளப்படுத்தப்பட்டு, அங்கே இருக்கக் கூடியவர்கள் வெளியில் வரக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுவார்கள். ஆனால் இதனை காதில் வாங்காமல் பலர் இது போன்று தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து வெளியே வந்து சுற்றி திரிந்து கொரோனா பரவல் அச்சத்திற்கு காரணமாக இருக்கிறார்கள் என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது.

இது குறித்து அமைச்சர் எஸ் பி வேலுமணி தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோவை மாநகராட்சியை பொருத்தவரையில் வெளி மாநில, மாவட்ட, நாடுகளிலிருந்து வந்த 1,100 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு வந்து தனிமைப்படத்தப்பட்ட மக்கள் அரசுக்கு தெரியாமல் வீடுகளை விட்டு வெளியே சுற்றுவதைத் அக்கம்பக்கத்தினர் கண்டால், உடனடியாக 0422 – 230 2323 என்ற எண்ணிற்கு கால் செய்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |