Categories
தேசிய செய்திகள்

வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள்… முகக் கவசம் கட்டாயம்… கெஜ்ரிவால் அறிவுரை..!!

கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாமல், கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று அரவிந்த கெர்ஜிவால் வலியுறுத்தியுள்ளார்.   

உலக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பி விட்டோம் என்று எண்ணுகையில் கொரோனாவின் 2-வது அலை இரண்டு மடங்காக அதிகரித்து மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. கொரோனாவின் முதல் அலையிலிருந்து சிக்கி தப்பிவந்த டெல்லி, இப்போது இரண்டாவது அலையில் சிக்கிக் கொண்டது.

கொரோனாவின் பரவலை குறைக்க அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனையொட்டி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் அவர், ” வீட்டைவிட்டு தேவை இல்லாமல் வெளியே செல்லாதீர்கள், கட்டாயம் முக கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினியை பயன்படுத்துங்கள். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள்” என்று அறிவுரை கூறியுள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பை குறைப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் ஊரடங்கு பொது தொடக்கம் ஒரு தீர்வு ஆகாது என சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டாலும் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கு பதிலாக தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார். மருத்துவமனை படுக்கைகளை மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |