Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கொடுத்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை வாடகைக்கு கொடுத்து பெண்ணிடமிருந்து 1 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணா நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அலெக்சாண்டர் என்பவர் அண்ணாநகரில் தங்களுக்கு ஒரு வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டிற்கு நீங்கள் வாடகைக்கு வரலாம் என அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார், இதனை நம்பிய சாரதா 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தை முன்பணமாக கொடுத்து அந்த வீட்டில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று சாரதாவின் வீட்டிற்கு சென்ற வங்கி அதிகாரிகள் இந்த வீட்டை நாங்கள் ஜப்தி செய்யப் போகிறோம் நீங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாரதா அலெக்சாண்டரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அலெக்சாண்டர் எந்த பதிலும் கூறாமல் இருந்துள்ளார். மேலும் முன் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாரதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அலெக்சாண்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |