சொத்துக்காக தாயை மகனே கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டையை அடுத்த தோக்கவாடி ஊராட்சியில் அமைந்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பங்கஜம். 60 வயதான இவர் திருமண தரகராக இருந்து வந்தார். 25 வருட களாக பிரிந்து வாழ்ந்து வரும் பங்கஜத்திற்கு பிரகாஷ், சக்தி என்ற 2 மகன்கள் உள்ளனர் பிரகாஷுக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும் 5,3 மற்றும் ஒன்னரை என்ற வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்
இரண்டாவது மகனான சக்தி திருமணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் . பிரகாஷ் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார் இவர் குடும்பத்தினரும் பங்கஜமும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீடு பங்கஜம் பெயரில் உள்ளதால் தனது பெயருக்கு மாற்ற சொல்லி தகராறு செய்து வந்தார் .அதற்கு மறுப்பு தெரிவித்த பங்கஜம் எனக்கு பிறகு இந்த வீடு உன் குழந்தைகளுக்குத்தான் எழுதி வைப்பேன் என கூறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு மாடியில் உள்ள ஓலை கொட்டகையில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த அம்மாவிடம் அங்கு வந்த பிரகாஷ் மீண்டும் வீட்டை என் பெயரில் மாற்றி எழுத கூறி தகராறு செய்தார் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த பிரகாஷ் இரும்பு குழாயால் பங்கஜம் மண்டையில் ஓங்கி அடித்ததார் .இதில் பங்கஜத்திற்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலே அலறல் சத்தம் கேட்டு முத்துலட்சுமி அங்கு ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மாமியாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும் கொன்றுவிடுவேன் என முத்துலட்சுமியை பிரகாஷ் மிரட்டினார்.பின்னர் பிரகாஷ் தன் தாயின் உடலை வீட்டுக்கு எதிரில் உள்ள காலி இடத்தில் கொண்டுசென்று அடுக்கி வைத்த பலகையின் மேல் போட்டு விறகுகளை உடலின் மீது அடுக்கி வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார் உடல் எரியும் வரை அங்கேயே இருந்து சாம்பலை அள்ளிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து முத்துலட்சுமி அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்த திருச்செங்கோடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ள தொடங்கி தாயை கொன்று விட்டு தப்பிய பிரகாஷை தேடி வருகின்றனர்.