அகில பாரத ஹிந்து மகாசபா தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, உதவித்தொகை ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள் . கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் கிடைக்கிறது . இந்துக்கள் அப்பாவியாக விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகையினாலே இந்துக்களுக்கு கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமிர்களுக்கு கொடுப்பது போல உதவித்தொகை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மையமாக வைத்து அகில பாரத இந்து மகா சபா இந்து இயக்கங்களோடு இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது.
இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சரடு விடுற வேலை செய்றான். அவர் 1000என்றால் இவர் 1,500.அரசு மானியம் பெறக்கூடிய எல்லா வங்கிகளில் இருக்கக்கூடிய எல்லா கடனும், கல்வி கடன், நகை கடன் , விவசாய கடன், வாகன கடன், வீட்டுக்கடன் அத்தனை கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பது எங்களின் தேர்தல் அறிக்கை. காங்கிரஸினுடைய கார்பன் காப்பி தான் பிஜேபி. ஆகையால் பிஜேபி ஒரு கட்சி,
இந்து மகாசபை இன்னொரு கட்சி. தேர்தல் என்று வந்து வந்துவிட்டால் எல்லா கட்சியும் போட்டியிம் தானே. அதனால எல்லாரும் சேர்ந்து இந்துக்களுக்கு வாக்களியுங்கள். வர்த்தக துறைமுகம் அவசியம் வேணும். வளர்ச்சித் திட்டங்களில் வர்த்தக துறைமுகம் வேண்டும். ஆனால் அது கன்னியாகுமரில தேவையில்லை. விமான நிலையம் கன்னியாகுமரிக்கு வர வேண்டும் என தெரிவித்தார்.