இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. அதையொட்டி இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வீட்டுக் கடன் வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி வீட்டுக்கடன் வாங்கும் நபர்களுக்கு பிராசஸிங் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பெண் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 0.05% வட்டி சலுகை உண்டு. மேலும் எஸ்பிஐ வங்கியின் யோனோ அப் மூலம் வீட்டு கடன் பெறுவதற்கு விண்ணப்பித்தால் 0.05% வட்டி சலுகை கிடைக்கும்.
மொத்தமாக மூன்று சலுகைகளை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களுக்கு 6.70% முதல் வட்டி வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் மிஸ்டுகால் மூலமாகவும் கடன் பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் எஸ்பிஐ வங்கி 7208933140 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து வீட்டு கடன் பெறலாம். இந்த அறிய வாய்ப்பை வாடிக்கையாளர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.