தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் எச்டிஎப்சி நிறுவனம் வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு சலுகையை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் வட்டி விதிக்கப்படுவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.இருந்தாலும் 8.40% வட்டிக்கு வீட்டுக் கடன் கிடைக்க வேண்டுமென்றால் வாடிக்கையாளரின் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
வீட்டுக் கடன், பேலன்ஸ் ட்ரான்ஸ்பர், வீடு புதுப்பித்தல் மற்றும் வீடு விரிவாக்கம் ஆகிய பணிகளுக்கு இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியும் . அதாவது புதிய வீடு வாங்குவது, வீடு கட்டுவது,வீடு புதுப்பித்தல் மற்றும் வீட்டை விரிவாக்கம் செய்ய 8.40% வட்டிக்கு எச்டிஎப்சி வங்கியில் வீட்டுக் கடன் பெற முடியும்.அதேசமயம் ஏற்கனவே வேறு ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி செலுத்தி வருபவர்களும் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் என்ற முறையில் எச்டிஎப்சி நிறுவனத்திற்கு வீட்டுக் கடனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.