நெல்லையில் கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மானூரில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று விட்டு பின்னர் வீடு திரும்புவதற்காக கரம்பை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது நெல்லையில் வசித்து வரும் ராம் என்பவர் வினோத் குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு எதிரே வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று இரண்டும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்