மர்ம நபர் வீட்டில் பணயக்கைதிகளாக பிடித்து வைத்தவர்களை சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் உள்ள ஒரிகான் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் ஒரு வீட்டில் இருந்த குடும்பத்தினரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது திங்கள் மதியம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். ஆனால் இதில் கோபமடைந்த அந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் பலர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காவல் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை. அதோடு அந்த நபருக்கு எதிராக காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு குறித்து மாநில காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் நிர்வாக விடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.