ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டத்தில், வீட்டுக் கடன்களுக்கான சீர்திருத்தம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறை மற்றும் வீடமைப்பு துறைக்கு கடன் ஓட்டம் மேம்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வீட்டு கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது 2022 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை பெறப்படும். அனைத்து வீட்டு கடன்களுக்கு மீது பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.
வீடமைப்புத் துறையில் முக்கியத்துவமும், பொருளாதாரத்திற்கு அதனால் கிடைக்கும் நன்மைகளையும் கருதி சீர்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனால் வங்கிகளால் நிதிநிலை நெருக்கடி பற்றி கவலைப்படாமல் வீட்டுக் கடன்களை தாராளமாக வழங்க முடியும். அதனால் ஏராளமானோர் வீட்டுக் கடன்களை பெறலாம். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை வீட்டுக்கடன் சீர்திருத்தம் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் வரை வீட்டு கடன் பெறுவோர் அனைவரும் பயன் பெறலாம். அதுமட்டுமல்லாமல் பணவீக்கம் உயர்ந்துள்ள சூழலிலும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தவில்லை. இதுவும் வீட்டுக்கடன் வாங்குவோருக்கு பயனளிக்கும் செய்தியாகவே உள்ளது. குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.