இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை திடீரென உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வட்டி விகிதம் 6.90 விழுக்காட்டிலிருந்து 7.40 விழுக்காடு ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது ஆர்பிஐ ரெப்போ வட்டி ஏமாற்றும் போது RLLR வட்டியும் மாறும். இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன் வாங்கியோருக்கு இஎம்ஐ கட்டணம் உயரும். இதற்கு முன்னதாக ஜூன் 1-ஆம் தேதி முதல் RLLR பட்டி 6.5 விழுக்காட்டிலிருந்து 6.9 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 7.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு முறை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் EMI சுமை மேலும் அதிகரித்துள்ளது.