Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன் மினிமம் வட்டி திடீர் உயர்வு… EMI உயரப் போகுது?…. எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியின் தனது வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை தற்போது 7.55 சதவீதமாக உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு ஜூன் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த ஜூன் 8-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது எஸ்பிஐ வங்கியின் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.

அதன்படி வீட்டுக் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது எஸ்பிஐ வீட்டுக்கடன் குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை கடந்த ஜுன் 15ஆம் தேதி முதல் 0.20 சதவீதமாக எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது. அதனால் வீட்டுக் கடன் வாங்கியோர் மற்றும் புதிதாக வீட்டு கடன் வாங்குவோர் ஆகியோருக்கு EMI உயரக் கூடும். இருந்தாலும் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது.

Categories

Tech |