வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் இருக்கும் இறும்பூதிபட்டியில் வாழ்ந்து வருபவர் சரவணன். இவருக்கு இரண்டு வயதில் அபிஷேக்(2) என்ற ஆண் குழந்தை இருக்கின்றது. இவர் திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டையில் இருக்கும் போத்தனூர் பொன்னம்பட்டி தெருவில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
அங்கே அபிஷேக் விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்ததால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் குழந்தை அபிஷேக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.