வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கட்டாய படுத்தி தாலிகட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு அருகே பூந்தமல்லியை சேர்ந்தவர் விஜய். இவர் கேஸ் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகின்றார். இவருடைய உறவினர் வீடு அதேபகுதியில் உள்ளது. அவ்வீட்டிற்கு சம்பவத்தன்று சென்ற விஜய் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கட்டாய படுத்தி தாலி கட்டியுள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி வீட்டில் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவ்வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த விசாரணையில் இவர் ஏற்கனவே இரண்டு பெண்ணை திருமணம் செய்து மூன்றாவதாக சிறுமிக்கு கட்டாய தாலி கட்டியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.