Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் மாயமான சிறுவன்… தேடி வந்த போலீஸ்… திடீரென கிடைத்த தகவல்… காத்திருந்த அதிர்ச்சி…!!!

கரூர் அருகே வீட்டிலிருந்து மாயமான சிறுவன் ஒருவன் அங்குள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே இருக்கின்ற கல்லு பாளையம் என்ற பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்துவருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றும் அவருக்கு மணிகண்டன் என்ற 15 வயதுடைய மகன் இருக்கின்றான். அவன் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால்,கரூரில் இருக்கின்ற மனநலம் பாதிக்கப்பட்டவருக்கான சிறப்பு பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்த தனது மகனை காணவில்லை என்று மணிகண்டன் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்துள்ளனர்.

அப்போது நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு நபருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கிணற்றில் மிதந்த பிணத்தைத் தூக்கி பார்த்த போது, அது மாயமான சிறுவன் மணிகண்டனின் சடலம் என்பதை அறிந்தனர்.அதன்பிறகு காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |