Categories
சினிமா தமிழ் சினிமா

“வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்ல திருமணத்திற்காக பல லட்சம் செலவு செய்த விக்ரம்”….. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!!!!

தனது வீட்டில் பணிபுரியும் ஊழியரின் இல்ல திருமணத்திற்காக பல லட்சம் செலவுகளை ஏற்றுக் கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வெற்றி பாதைக்கு சென்றார். விக்ரம் சிறப்பாக நடித்தாலும் திரைக்கதை வலுவாக அமையாததால் அவரின் திரைப்படங்கள் தற்பொழுது தோல்வியை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் அண்மையில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான கோப்ரா திரைப்படம் தோல்வியையே சந்தித்துள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதியில் விக்ரம் நடிப்பில் மணிரத்தனம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படம் விக்ரமை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் 40 வருடங்களாக தனது வீட்டில் வேலை பார்த்து வந்த பெண்ணின் மகன் திருமணத்திற்கு விக்ரம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததோடு திருமணத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து இருக்கின்றார். விக்ரம் வீட்டில் சென்ற 40 வருடங்களாக மேரி என்பவர் வேலை செய்து வருகின்றார். இவரின் கணவரும் விக்ரம் வீட்டில் வேலை செய்து வந்த நிலையில் காலமானார். இந்த நிலையில் மேரி தனது மகன் தீபக் என்பவருக்கு வர்ஷினி என்ற பெண்ணுடன் திருப்போரூரில் இருக்கும் கோவில் திருமணம் நடத்த முடிவு செய்து சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக விக்ரம் மாப்பிள்ளை வீட்டாரின் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். மேலும் மேரி குடும்பத்திற்கு சொந்த வீடு ஒன்றையும் வாங்கி கொடுத்திருக்கின்றார். மேரியின் இரண்டு குழந்தைகளையும் தனது சொந்த செலவில் படிக்க வைத்திருக்கிறார். விக்ரம் தனது வீட்டில் வேலை செய்பவருக்காக இவ்வளவு செலவு செய்ததை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Categories

Tech |