கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணம் என்ற தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மரியம்மா என்ற பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தை நேற்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது சாலை வழியாக வந்த ஒரு லாரி திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தம்பதியின் வீட்டின் மீது மோதியது. அதனால் வீட்டில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் படுத்து இருந்த குழந்தை மீது சுவர் விழுந்து விபத்துக்குள்ளானது.
இடிபாடுகளில் சிக்கிய குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து உடனே விரைந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு விசாரித்தனர்.அப்போது லாரி டிரைவரின் கவனக்குறைவு தான் குழந்தையின் மரணத்திற்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.