மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கபூர் கிராமத்தில் 19 வயது உடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். அந்த மாணவியை முத்தரசன் என்பவர் தவறான முறையில் கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் முத்தரசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்தரசன் தனது நண்பர்களான சரோஜா, முதலி, சுதன் அரசன், அன்பரசன் ஆகியோர் உதவியுடன் மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
அது மட்டுமின்றி வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் தகாத முறையில் சில்மிஷம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காணை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முத்தரசன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அன்பரசன், முதலி, முத்தரசன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.