Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள விநாயகர் நகரில் தரணிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தையை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தரணிதரன் தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த தரணிதரன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தரணிதரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தரணிதரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |