சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தில் கூலித்தொழிலாளியான அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியாக வீட்டிலிருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்துவிடுவதாக அந்த சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.
இதுபற்றி அந்த சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி அசோகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.