Categories
உலக செய்திகள்

வீட்டில் “டமால்” சத்தம்… காப்பாற்ற வந்த காவல்துறையினர்… உள்ளே நேர்ந்த கொடூர சம்பவம்…!!

அமெரிக்காவில் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு இருவர் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் கேட்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வீட்டில் இருக்கும் நபர் அவரின் மனைவியை சுட போவதாக மிரட்டியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இதனையடுத்து அந்த வீட்டின் அருகே செல்ல முயன்றபோது அந்த வீட்டிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் காவல்துறையினரை சுட்டுள்ளார்.

இதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். அதன்பிறகு காயமடைந்த காவல்துறையினரை மற்ற காவலர்கள் சேர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த நபரை சரணடையுமாறு கேட்டு நீண்ட நேரமாக போராடியுள்ளனர்.

ஆனால் அதிக நேரம் கடந்தும் அந்த வீட்டிலிருந்து எந்த சத்தமும் வராததால் காவல்துறையினர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். மேலும் இறந்த நபர் தான் காவல்துறையினரை சுட்டிருப்பார் என்று கருதப்படுகிறது. மேலும் காவல்துறையினர் அவர்களின் அடையாளங்கள் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |