Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த முறுக்கு…. குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்… தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 எண்ணெய் பாத்திரத்தில் தவறி  விழுந்து 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பால்நல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1  வயதுடைய பிவிஸ்கா  என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் குடும்பத்தினர் வீட்டில் கடந்த 7-ஆம் தேதி முறுக்கு செய்துவிட்டு எண்ணெய்  பாத்திரத்தை கீழே வைத்துள்ளனர். அப்போது விளையாடிக்கொண்டிருந்த பிவிஸ்கா நிலைதடுமாறி எண்ணெய்  பாத்திரத்தில் விழுந்து விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த  பிவிஸ்காவை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிவிஸ்கா  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |