வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் தம்பதிகள் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் அமிட்-பைனல். இவர்கள் இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் வீட்டில் உள்ள சிலிண்டர் திடீரென்று வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் தீ பற்றி எரிந்துவிட்டது. இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே அமித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி பைனல் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரின் இறுதிசடங்குக்கான பணிகளை குடும்பத்தார் செய்து வந்துள்ளனர்.
அப்போது சிகிச்சை பலனளிக்காமல் பைனலும் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து புதைப்பதற்கு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் அமிட்டின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கனடாவில் வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின்படி உடனடியாக விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் மகன் மற்றும் மருமகளின் உடலை பார்த்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.