வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த நபர்கள் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனிலுள்ள Somali road என்ற பகுதியில் இருக்கும் வீட்டிலிருந்து எரிவாயு கசியும் வாசனை பயங்கரமாக வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் காவல்துறையினர் உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் செல்ல முயன்றபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் பின்பக்க வழியாக வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடி இருக்கிறார்கள். இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற காவல்துறையினர் அதிர்ந்துள்ளனர்.
அதாவது ஒவ்வொரு அறையிலும் சக்திவாய்ந்த புற ஊதா கதிர்களின் வெப்பத்தினால் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த வீட்டில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக மின்சாரத்தை திருடி இருக்கிறார்கள். இதனால் ஜங்ஷன் பாக்ஸ் ஒன்று தீப்பிடித்துள்ளது. மேலும் இதன் காரணமாக ஒரு எரிவாயு குழாய் சேதமடைந்திருக்கிறது. இதனால் பெரும் விபத்து நேர வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த எரிவாயு மற்றும் மின் இணைப்பை காவல்துறையினர் துண்டித்துள்ளனர். அதன் பின் அந்த தெரு முழுவதையும் சீல் வைத்துள்ளனர். மேலும் ஹெலிகாப்டர் உதவியுடன் அந்த வீட்டில் தப்பி ஓடியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.