Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டில் இது தான் நடக்குதா…. வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்…. 20 கிலோ அட்டைகள் பறிமுதல்….!!

பதப்படுத்தி பதுக்கி வைத்திருந்த 20 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மண்டபம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த அமானுல்லாகான் என்பவரது வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று நடத்திய சோதனையில் 20 கிலோ கடல் அட்டைகள் மற்றும் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருள்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடல் அட்டைகளை பதப்படுத்தி வைத்திருந்த அமானுல்லாகானை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |