Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… வலை வீசித் தேடும் போலீசார்…!!

அரசு ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகை பணம்  மற்றும் செல்போன்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டதில் உள்ள  பிரகாஷ் நகர் பகுதியில் காசிமணி என்பவர் வசித்து வருக்கிறார். இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இந்நிலையில் இரவு காசிமணி  தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டு  இருந்த போது அவரின் வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம  நபர்கள் உள்ளே  நுழைந்துவிட்டனர். இதனை அடுத்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த  2 லட்ச ரூபாய் பணம் மற்றும் 28 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து உள்ளனர். அதன் பின் காசிமணியின் மனைவியின் கழுத்தில் அணிந்து இருந்த  9 பவுன் தங்க சங்கலி மற்றும் விலை உயர்ந்த செல்போனையும் திருடிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர. இந்நிலையில் காலையில் எழுந்த பார்த்த குடும்பத்தினர் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் அறைக்கு சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடையங்களை சேகரித்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறைனர் அரசு ஊழியரின் வீட்டிருக்குள் புகுந்து நகை, பணம் மற்றும் செல்போனை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இவ்வாறு இரவு நிரத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |