Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே தயாரிக்க ஆரம்பிச்சிட்டாங்க… கிடைத்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய சகோதரர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டில் பின்புறம் வைத்து சாராயம் காய்ச்சிய சகோதரர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி மதுபிரியர்கள் மது அருந்துகின்றனர். இந்நிலையில் குன்றத்தூர் பகுதியில் வீட்டில் சாராயம் காய்ச்சபடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது வீட்டிற்கு பின்புறம் சாராயம் காய்ச்சி கொண்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர். அப்போது அவர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்த போது சகோதரர்களான வினோத் மற்றும் விஜி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 40 லிட்டர் சாராயஊறலை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |