Categories
லைப் ஸ்டைல்

வீட்டிலேயே கம கம பிரியாணி மசாலா…. செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க…!!!

நமது பாரம்பரிய உணவு வகை என்றால் இல்லை என்றாலும் கூட பிரியாணி இப்போது அனைவரின் ஆசை உணவாக மாறிவிட்டது. பிரியாணியின் வாசனைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பிரியாணி மசாலா. அதை வீட்டில் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

தேவைபடும் பொருட்கள்:

நட்சத்திர சோம்பு – 2 டேபிள் ஸ்பூன்.

பிரியாணி இலை – 6.

பட்டை – 5.

கிராம்பு – 2.

டேபிள் ஸ்பூன்.

ஏலக்காய் – 2 டேபிள் ஸ்பூன்.

ஜாதிக்காய் – 3.

மிளகு – 1 டேபிள் ஸ்பூன்.

தனியா – 2 டேபிள் ஸ்பூன்.

காய்ந்த மிளகாய் – 7.

தயார் செய்யும் முறை:

1.வாணலியை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தவும். நட்சத்திரப் பூ, பட்டை, பிரியாணி இலை, பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய், காய்ந்த மிளகாய், கிராம்பு, தனியா, மிளகு இவற்றை சேர்த்து போட்டு மிதமாக வறுக்கவும்.

2.பின் இவற்றை ஆற வைத்து பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும். இப்போது மூக்கைத் துளைக்கும் வாசனை கொண்ட பிரியாணி மசாலா தயார்.

3.ஒரு கிலோ மட்டன் பிரியாணிக்கு 2 டேபிள் ஸ்பூன் அளவும், ஒரு கிலோ சிக்கன் பிரியாணிக்கு ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவும், மீன் பிரியாணிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவும், குஸ்கா, முட்டை பிரியாணிக்கு முக்காய் டேபிள் ஸ்பூன் மசாலா அளவும் சேர்த்தால் பிரியாணி மிகவும் சுவையானதாக இருக்கும்.

Categories

Tech |