Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்… பட்டப்பகலில் முகமூடி கொள்ளையனின் துணிச்சலான செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் முகமூடி அணிந்துவந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டினார். இதையடுத்து அந்நபர், அணிந்திருந்திருக்கும் நகையை கழற்றி தருமாறு பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார்.

அதனை  வாங்கிக்கொண்ட அந்த நபர், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி இருக்கிறார். அதன்பின் இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த நபர் தன் கூட்டாளியுடன் அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது . இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறனர்.

Categories

Tech |