வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியில் அன்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டூர்புரத்தில் கேபிள் டிவி ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் அன்பு தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.