வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள என்.ஜி.ஓ. காலனியில் பூ வியாபாரியான செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் இரவு நேரத்தில் சாமி கும்பிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் செல்லத்துரையை வழிமறித்து அவரிடமிருந்து ரூபாய் 55 ஆயிரம் மற்றும் கைபேசி ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து செல்லதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படையமைத்து தப்பிச்சென்ற 3 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.