மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் தொழிலாளியான கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கருணாகரன் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் மாரிமுத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.