Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வாலிபர்…. “வழியில் காத்திருந்த ஆபத்து”…. மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

ஊத்துக்கோட்டையில் இளைஞரை வெட்டி கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகரை சேர்ந்த ராபின் என்பவர் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சிக்காக ஊத்துக்கோட்டை அருகே இருக்கும் போந்தவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் இரவு 11 மணி அளவில் தனது நண்பர் கமலுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

இவர்கள் பழைய பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது 4 பேர் அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் ராபின் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த 4 பேர் தப்பி சென்றார்கள். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |