Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிருங்காகோட்டை பகுதியில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியிலுள்ள வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் சந்தாவை  மோட்டார் சைக்கிளில்  பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து  தப்பி சென்றார்.

இதுகுறித்து சாந்தா சிங்கம்புணரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |