Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த முதியவர்… வழியில் நடந்த விபரீதம்… டிரைவர் கைது…!!

சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சுபட்டியில் முனியாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் அந்த சரக்கு வாகனம் எதிர்பாரதவிதமாக சாலையோரம் சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கோவிலாங்குளம் காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் சரக்கு வாகன டிரைவரான எருமைகுளத்தை சேர்த்த மாயழகு என்பவர் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |