வீட்டிற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாளம்பால் நகரில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டிற்குள் அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் நுழைந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்தனர். அதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை அருகில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.