கரடி வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உல்லத்தட்டி கிராமத்தில் 90 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இங்கு முகாமிட்டுள்ள கரடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து உணவு பொருட்களை தின்று நாசப்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் அந்த கரடி ஒரு வீட்டிற்குள் நுழைந்தது.
இதனை பார்த்ததும் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் அச்சத்தில் அலறியுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கரடியை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.