Categories
உலக செய்திகள்

வீட்டின் கதவருகே சடலம்…! கத்தி குத்தோடு கிடந்த குழந்தைகள்…. கனடாவில் கொடூர சம்பவம் …!!

கனடாவில் ஒன்ராறியோவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 38 வயது பெண் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் கையில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு கத்தி குத்து காயங்களுடன் மற்றொரு 35 வயது பெண்ணும், நான்கு வயது மற்றும் இரண்டு வயது பையனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அப்போது திடீரென்று அந்த வீட்டிற்குள் இருந்த  37 வயதுடைய ஆண் ஒருவர் போலீசாரை தாக்க முயன்றுள்ளார்.

இதனை சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து கத்திகுத்தால் காயமடைந்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களின் உயிருக்கும்  எந்த ஆபத்தும் இல்லை என்றும், இது தனிப்பட்ட பகையால் நடந்த சம்பவம் என  போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |