மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள செல்வநகர் பகுதியில் கவுரி சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மருத்துவரான இவ்பாஷினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவ்பாஷினி தனது காரை வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் இவ்பாஷினியின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இவ்பாஷினி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கணேசன் என்பது தெரியவந்துள்ளது.