Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்…. கொரோனாவை தடுக்க நடவடிக்கை…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டையினுடைய கலெக்டர் வீடு வீடாக சென்று தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிளான்ஸ் புஷ்பராஜ் அரக்கோணத்திலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வார்டு பகுதியையும், ஆக்சிஜன் பகுதியையும் ஆய்வு செய்தார். அதன்பின் மருத்துவ அலுவலரிடம் மருந்து இருப்புகள் மற்றும் ஆக்சிஜன் இருப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனையடுத்து கலெக்டர் நகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட சுவால்பேட்டை பகுதியிலிருக்கும் வீடுகளுக்கு சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன்பின் அப்பகுதியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சைக்கான மையத்தையும் அவர் ஆய்வு செய்தார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |