அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று பிரசார பணிகளை தொடங்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.உத்தரபிரதேசத்துக்கு 7 கட்ட தேர்தல், மணிப்பூர் தேர்தல் 2 கட்டம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு ஒரே கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனது கட்சியினரிடம் காணொலி காட்சி வழியே இன்று கட்சியினரிடம் பேசினார்.அவர் பேசியதாவது, “வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. அதனால், நீங்கள் இன்றிலிருந்து வீடு, வீடாக சென்று பிரசார பணியை தொடங்குங்கள்.நீங்கள் மக்களை சந்திக்கும்போது, டெல்லி அரசு செய்த நல்ல விசயங்களை பற்றி எடுத்து கூறுங்கள். எந்தவொரு கட்சியை பற்றியும் தவறாக எதுவும் கூற வேண்டாம். நேர்மறையான பிரசாரம் மட்டுமே நாம் செய்ய வேண்டும்.” என கூறியுள்ளார்.
|