Categories
உலக செய்திகள்

வீடு புகுந்து கடத்தப்பட்ட சிறுமி…. தாய் தான் காரணமா….? காவல்துறையினர் விசாரணை….!!

வீடு புகுந்து 8 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்  பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் சிறுமியை கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிழக்கு பிரான்சில் லெஸ் பவுலியர்ஸ் பகுதியில்  செவ்வாய்க்கிழமை காலை 11 30 மணி மணியளவில் வீட்டில் தன் பாட்டியுடன் இருந்த மியா மாண்டேமகி சிறுமியை மூவர் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தாயார் லோலா மான்டேமகியிடம் (28) இருந்த சிறுமியை நீதிமன்றம் பாட்டியிடம் ஒப்படைத்துள்ளது.

மேலும் அவர் தனது மகளை தனியாக சந்திக்க கூடாது என்றும் பாட்டியின் முன்னால் மட்டுமே சிறுமியை சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறுமியை கடத்தியது அவரது தயாராக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுமி மியாவின் உயிருக்கு அவரால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் முழுவதும் அந்த சிறுமி மியாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |