செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது. இதனால் தங்களது உடைமைகளுடன் பொது மக்கள் வெளியேறி வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் 2,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உடமைகளுடனும் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு மழையில் நனைந்தபடி வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் வரதராஜபுரம் மற்றும் ராயப்ப பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி பேரிடர் கண்காணிப்பு குழு அதிகாரி திரு. சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.