Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடுகளுக்கு 100யூனிட் கட்… விவசாயிளுக்கு இனி கிடையாது…. ஷாக் அடிக்கும் மத்திய அரசின் மின்சார சட்டம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எங்களுடைய தலைமை அலுவலகத்திலேயே அது சம்பந்தமான பேட்டியை கொடுத்தேன். இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதா என்பது, ஏழை மக்களுக்கு,  அடித்தட்டு மக்களுக்கு,  ஒரு பாதுகாப்பு இல்லாத, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, அதே போல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, குடிசை வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதையெல்லாம் இந்த மின்சார திருத்த சட்ட மசோதா நடைமுறைக்கு வந்தால்,  இது முற்றிலுமாக அவர்களுக்கான பாதிப்பை உருவாக்கும்.

இலவச மின் திட்டங்கள் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படும். தமிழகத்தில் இருக்கக்கூடிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அதனுடைய ஒட்டுமொத்த செயல்பாடுகளையும், மாநிலத்தினுடைய ஒழுங்கு முறை அததுனுடைய செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசு பறிப்பதற்கான சட்டமாக இது அமைந்திருக்கின்றன.

தமிழகத்திற்கு எங்கெங்கு எந்தெந்த பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பது ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய மாநிலங்கள் அவர்கள் எந்தெந்த பகுதிகளுக்கு மின்சாரத்தை பகிர்ந்த அளிக்கிறது என்பது தீர்மானிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது ? இதை ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசு, அந்த ஒழுங்குமுறை ஆணையம்தான் இனிமேல் மின்சாரத்தை பகிர்ந்து அளிக்கும் என்கின்ற நிலைகளை கொண்டு வந்துள்ளார்கள்.

தனியாருக்கு கொடுக்கக்கூடிய அனுமதிகளுக்கு விண்ணப்பித்து…  குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒன்று மறுக்க வேண்டும், இல்லை என்றால் அனுமதி கொடுக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லை என்றால் தானாகவே அவர்களுக்கு அனுமதி கிடைத்ததாக கருதவதாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |