இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம் நாட்டில் முக்கியமான பண்டிகைகள், வாழ்த்துக்கள், அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள் ஒட்டப் படுவது வழக்கம். அவ்வாறு ஒட்டப்படும் போஸ்டர்கள் சிலரின் அனுமதி இல்லாமல், உரிமை பெறாமல் ஒட்டப்படுகின்றன. அதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீட்டில் உரிய அனுமதி இல்லாமல் நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ் ஓட்டுவதால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவதாக அளிக்கப்பட்ட மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் மட்டும் அனுமதியுடன் போஸ்டர் ஒட்ட உத்தரவிட்டுள்ளது.