Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீடியோ காலில் பேசியவாறு…. தூக்கில் தொங்கிய விடுதி மேலாளர்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

திருமணமான நபர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பஜனை கோவில் வீதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பவர் வீடு எடுத்து தங்கியுள்ளார். இவர் பெங்களூருவில் இருக்கும் தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவ்வபோது ரியாஸ் கோபிக்கு வந்து செல்வது வழக்கம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ரிதம் என்ற மகள் உள்ளார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 ஆண்டுகளாக ரியாஸ் தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ரியாஸ் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ரியாஸ் கோபிக்கு வந்து கேரளாவில் இருக்கும் தனது மைத்துனரான நிஷாந்த் என்பவரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் காதலித்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். எனக்கு வாழ பிடிக்கவில்லை. நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று வீடியோ காலில் பேசியவாறு ரியாஸ் தூக்கு போட்டுள்ளார்.

இதனை பார்த்ததும் நிஷாந்த் வேண்டாம் என்று கத்தியுள்ளார். மேலும் நிஷாந்த் ரியாஸின் செல்போனில் அழைத்து கொண்டே இருந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று ரியாஸை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |