கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் இது குறித்து விசாரிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசுவரூபம் எடுத்து வரும் நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரிப்பதற்காக உதகை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்படும் என்று எஸ்.பி ஆசிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.. இந்த தனிப்படை கோடநாடு கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொடநாடு வழக்கை பொறுத்தவரை தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. இதில் யார் யாரெல்லாம் இடம்பெறுவார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் இடம்பெற வில்லை..
முன்னதாகவே காவல்துறை இந்த கோடநாடு வழக்கு தொடர்பாக விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் சயான் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளது.. மேலும் இந்த வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என தெரிவித்திருந்தது..
இன்றைய வழக்கு விசாரணையின் போது கூட அரசுத் தரப்பில் நாங்கள் மேல் விசாரணை தொடர வேண்டும், அதற்கு ஒரு மாத அவகாசம் வேண்டும் என உதகை மாவட்ட நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது.. நீதிமன்றமும் வழக்கை அக்டோபர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.. இன்றைய தினம் எதிர் தரப்பை விசாரிக்க வேண்டிய நிலையில்தான் அரசு தரப்பில் நாங்கள் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டது.. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. இதனால் இந்த வழக்கு மீண்டும் புதிய கோணத்தில் விசாரிக்கப்பட்டு பல்வேறு தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது..